மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

கொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிமையாளர்கள்!

கொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிமையாளர்கள்!

கொரோனா அச்சத்தால் தங்கள் வீட்டில் குடியிருக்கும் மருத்துவர்களை வீட்டைக் காலி செய்யுமாறு கூறி வருகின்றனர் தெலங்கானாவில் உள்ள வீட்டு உரிமையாளர்கள்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடூரத்திலிருந்து மக்களைக் காப்பவர்களாக உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் நேரம் காலம் பார்க்காமல் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். பலர் தங்கள் குடும்பங்களைவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளைக் காத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும், எப்போதும் வேண்டுமானாலும் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்தே அவர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா அச்சத்தால் வாடகை வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை வீட்டு உரிமையாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் என்ற மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், ``மக்கள் எங்களின் மருத்துவ கோட் மற்றும் ஸ்டெதெஸ்கோப் ஆகியவற்றுக்கு மட்டுமே அங்கீகாரம், மரியாதை வழங்குகிறார்கள். தங்கள் வீடுகளில் மருத்துவர்கள் தங்கியிருந்தால் தங்களுக்கும் வைரஸ் வந்துவிடும் என்று நம்புவதால் வாடகை வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். எந்த முன்னறிவிப்பும் இன்றி எங்களை வெளியேறும்படி கூறுகிறார்கள். இதனால் பல மருத்துவர்கள் தற்போது செல்வதற்கு இடம் இல்லாமல் தெருக்களில் நிற்கிறார்கள்.

எங்கள் மருத்துவமனையில் இருக்கும் விடுதிகளும் தற்போது தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றப்படுகின்றன. நாங்கள் எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இல்லாமல் வேலை செய்து வருகிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் எங்களுக்குக் காட்டிய நன்றியுணர்வு எங்கே? இப்படி நடந்துகொள்ளும் மக்களுக்காகத்தான் நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம்” என வேதனையாகத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020