மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

ஊரடங்கு: உங்கள் வங்கியின் வேலைநேரம் என்ன?

ஊரடங்கு: உங்கள் வங்கியின் வேலைநேரம் என்ன?

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா போன்ற முன்னணி வங்கிகள் தங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

வங்கிகள் பணி நேரத்தை ஷிப்டுகளாக மாற்றியமைத்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவதை தவிர்த்து ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளன.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி தனது பணி நேரத்தை மார்ச் 31ஆம் தேதி வரை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலான நேரத்துக்கு மாற்றியமைத்துள்ளது. பாஸ்புக் புதுப்பிப்பு மற்றும் வெளிநாட்டு நாணயக் கொள்முதல் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. “பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் கருதி பாஸ்புக் புதுப்பிப்புகள் மற்றும் வெளிநாட்டு நாணய கொள்முதல் ஆகிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம்” என்று வங்கி தெரிவித்துள்ளது. கிளைகளில் கூட்டத்தை குறைக்க உதவும் வகையில் செக் டிராப் பெட்டிகளைப் பயன்படுத்துமாறு ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி நேரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், “எங்கள் வங்கியின் கிளைகள் தேவையான சுகாதார நடவடிக்கைகள் மற்றும் குறைந்த ஊழியர்களுடன் திறந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இதே காரணத்திற்காக ஐசிஐசிஐ வங்கியின் தகவல் தொடர்பு மையமும் குறைந்த ஊழியர்களுடன் தனது சேவையை வழங்குகிறது. அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் வங்கி வருவதைத் தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலிருந்தபடியே ஐ மொபைல், நெட் பேங்கிங்கை பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது பணி நேரத்தை மாற்றியமைக்கவில்லை. தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, நாங்கள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்படுகிறோம். எனவே, அவசரகால தேவைகளுக்கு மட்டுமே எங்களை அழைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து செயல்படும் எங்கள் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளது.

கோட்டக் மகிந்திரா வங்கி

கோட்டக் மகிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பேணுவது குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், தனது பணி நேரத்தையும் மாற்றியமைத்துள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோட்டக் வங்கி செயல்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதால் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பது போன்றவற்றிகான கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எழில்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020