மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

கொரோனாவுக்குப் பின் ஹன்ட்டா: அடுத்த வைரஸ் அட்டாக்!

கொரோனாவுக்குப் பின் ஹன்ட்டா: அடுத்த வைரஸ் அட்டாக்!

டிசம்பர் மாத இறுதியில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் சமீபத்திய சில நாட்களாக குறையத்துவங்கியதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஆனால் அது பரவத்துவங்கிய மற்ற நாடுகளில் அதன் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை

இத்தாலி, ஈரான் துவங்கி இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வேறு சில நோய்களும் மக்களை தாக்க துவங்கியுள்ளன. பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என இந்தியாவிலேயே சில நோய்கள் பற்றிய செய்திகள் வெளிவரும் நிலையில், சீனாவில் ஹன்ட்டா வைரஸ் பாதிப்பினால் ஒரு நபர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், யூனானை சேர்ந்த ஒருவர் பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பும்போது பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவேளை ஹன்ட்டா வைரஸும் இதுபோன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தால், அந்த பேருந்தில் பயணம் செய்த 32 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அதன் சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை

ஹன்ட்டா வைரஸ் குறித்து சிடிசி (Centers for Disease Control and Prevention)அளித்திருக்கும்

விளக்கத்தில் "ஹண்டா வைரஸ் என்பது எலிகளினால் பரவும் வைரசாகும், இது மனிதர்களுக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும் எனவும், மேலும் இந்த வைரஸ் காற்றினால் பரவாது என்றும், எலிகளின் சிறுநீர், எச்சில் மற்றும் மலம் ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுவதன் மூலமாகவே பரவும், மேலும் அரிதாக வைரசால் பாதிக்கப்பட்ட எலி கடிப்பதன் மூலமாகவும் வைரஸ் பரவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹன்ட்டா வைரஸ் மூலமாக (ஹெச்பிஎஸ்) hantavirus pulmonary syndrome மற்றும் (ஹெச்எப்ஆர்எஸ்) haemorrhagic fever with renal syndrome ஆகிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் சிடிசி கூறியுள்ளது

ஹன்ட்டா வைரஸ் தாக்குதலின் (ஹெச்பிஎஸ்) நோயின் அறிகுறிகளாக, உடல்சோர்வு, உடல்வலி, காய்ச்சல், மயக்கம், வயிற்று உபாதைகள் ஆகியவை ஏற்படும். அவற்றிற்கான சிகிச்சை பெறாமல் இருக்கும் நிலையில் கடும் இருமல்,மூச்சு திணறலுக்கு பிறகு மரணமும் நேரிடும் எனக் கூறப்படுகிறது. இந்த நோயின் மூலம் மரணிக்கும் சதவீதம் 38 என்பது குறிப்பிடத்தக்கது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது

(ஹெச்எப்ஆர்எஸ்) பாதிப்பு ஏற்பட்டால் அதே விதமான அறிகுறிகள் ஏற்படுவதோடு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிறகு கிட்னிகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது, இந்த நோயும் பொதுவாக அரிதாகவே மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்தநோயை கட்டுப்படுத்துவதற்கான முதல்படி எலிகளை கட்டுப்படுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020