மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

ஒரு கோடி ரூபாய் பூக்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

ஒரு கோடி ரூபாய் பூக்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

மாநில எல்லைகள் மூடப்பட்டதால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பூக்களை ஏரியில் விவசாயிகள் கொட்டிவிட்டுச் சென்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக காடையாம்பட்டி வட்டாரத்தில் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி, டேனிஷ்பேட்டை, பொம்மியம்பட்டி, தளவாய்பட்டி, ஜோடுகுளி, கொங்குபட்டி, மூக்கனூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் சாமந்தி பூக்கள், சாந்தினி, வைலட், வொயிட் செண்டு மல்லி போன்ற பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்களை பூசாரிப்பட்டி மார்க்கெட், சேலம் தேர்முட்டி பூ மார்க்கெட் மற்றும் விவசாயிகள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் யுகாதி பண்டிகையையொட்டி காடையாம்பட்டி, சந்தைபேட்டை, டேனிஷ்பேட்டை பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இருபதுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து ஏழு லாரிகளில் பத்து டன் சாமந்தி பூக்களைப் பெங்களூருவுக்கு நேற்று (மார்ச் 24) அதிகாலை கொண்டு சென்றனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் விவசாயிகள் பூக்களைக் கொண்டு சென்ற ஏழு லாரிகளையும் தடுத்து நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக விவசாயிகள் அத்திப்பள்ளி ஏரியில் பத்து டன் பூக்களை கொட்டி விட்டு வந்தனர்.

இதேபோல் பூசாரிப்பட்டி மார்க்கெட் மற்றும் தொப்பூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளிடம் விற்க பூக்களை விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் வியாபாரிகள் வராததால் ஜோடுகுளி ஏரி, தளவாய்பட்டி ஏரி, கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி ஆகிய ஏரிகளில் 20 டன் பூக்களை விவசாயிகள் கொட்டிவிட்டுச் சென்றனர். நேற்று ஒரே நாளில் 30 டன் பூக்களை விவசாயிகள் ஏரியில் கொட்டினார்கள். இந்த பூக்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020