மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

சென்னையில் 200 பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்து கழகம்!

சென்னையில் 200 பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்து கழகம்!

சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்காக 200 பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று (மார்ச் 25) அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகள் மட்டும் நடைபெறும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. அந்தவகையில் அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் பணியாளர்களுக்காக சென்னை மாநகரில் 200 பேருந்துகள் மட்டும் இயங்கும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நேற்று மதியம் முதல் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில், “ அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர், மின்சாரம், மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவசர பணிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போதிய பேருந்துகளும், ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020