மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

மானிய கோரிக்கை: மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

மானிய கோரிக்கை: மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளதாகப் பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று (பிப்ரவரி 26) அறிவித்துள்ளார்.

2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர்களும் முதல்வரும் பதிலளித்தனர். சிரிப்பலை, காரசார விவாதம் என அவை நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.

இந்நிலையில் வரும் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடவுள்ளதாகப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது, பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் துறை ரீதியான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பழைய மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் கட்சியினர் கேள்வி எழுப்பவுள்ளனர்.

கவிபிரியா

புதன், 26 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon