மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

கோமாவில் அன்பழகன்; கவலையில் திமுகவினர்

கோமாவில் அன்பழகன்; கவலையில் திமுகவினர்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் அன்பழகனை நேற்றும்,இன்றும் திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரிடம் மருத்துவர்கள் அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி வைத்திருப்பதாகவும், நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் மருத்துவமனைக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அவசரமாக விரைந்து சென்று கொண்டிருக்கிறனர். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல் நிலை குறித்து விசாரித்தனர். திருச்சியில் இருந்து இன்று காலை சென்னை வந்த நேரு அறிவாலயம் வழியே சென்றாலும் அறிவாலயத்துக்கு செல்லாமல் மருத்துவமனைக்கு அவசரமாக சென்றார்.

பேராசிரியர் அன்பழகன் நினைவு தப்பிய நிலையில் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்து காணப்படுகின்றனர்.

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon