மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

எருமசாணி விஜய்யுடன் அருள்நிதி இணைந்தது ஏன்?

எருமசாணி விஜய்யுடன் அருள்நிதி இணைந்தது ஏன்?

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என நடிகர் அருள்நிதி தன்னை எப்போதும் தனித்துவத்துடன் காட்டிக்கொள்ள விரும்புபவர். தற்போது அதன் தொடர்ச்சியாக இண்டர்நெட் உலகில் “எரும சாணி” சேனல் மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளரான அரவிந்த் சிங்கிடம் இப்படம் குறித்து விசாரித்தபோது “ இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில் பல உற்சாகமான தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப்படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான முயற்சிகளுக்கு செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K13, தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம்’ என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையின் மீதிருக்கும் தெளிவான பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக்கொண்டார். இணைய உலகில் "எரும சாணி" மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன் சினிமாவில் அறிமுகமாகி நடிகர்கள் இயக்குநர்களின் முதல்தர தேர்வாக, காமிக்கல் காமெடி செல்லமாக மாறியிருக்கிறார். அவர் பெரிய திரையில் இயக்குநராக தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி” என்றார்.

விஜய் குமார் ராஜேந்திரன் வெள்ளித்திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R.B.சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களின் 5 ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அருள்நிதி, விஜய் குமார் ராஜேந்திரன் இணையும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon