மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மோடி - ட்ரம்ப்: இன்று பேச்சுவார்த்தை!

மோடி - ட்ரம்ப்: இன்று பேச்சுவார்த்தை!

பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த ட்ரம்ப் நேற்று அகமதாபாத்தில் நடந்த, ‘நமஸ்தே ட்ரம்ப்’ பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியோடு கலந்துகொண்டார். முன்னதாக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று வந்தார் ட்ரம்ப். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்குப் பின் ஆக்ரா சென்று தாஜ்மஹாலையும் ரசித்து மகிழ்ந்தார்.

நேற்று முழுவதும் இரு தலைவர்களின் கொண்டாட்ட தருணங்களாகவே பார்க்கப்பட்ட நிலையில், ட்ரம்ப் விசிட்டின் அரசு ரீதியான அர்த்தம் என்ன என்பது இன்று டெல்லியில் நடத்தப்படும் இரு தரப்பு உரையாடல்கள், ஒப்பந்தத்தில்தான் அடங்கியிருக்கிறது. இன்று பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் இந்திய அமெரிக்க நாடுகளின் சார்பான இரு தரப்பு பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்கள்.

பிரதமர் மோடியை உண்மையான நண்பர், ஆனால் கடுமையான பேச்சுவார்த்தையாளர் என்று ட்ரம்ப் நேற்று கூறினார். மேலும் இரு நாடுகளும் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தில் உறுதியாக ஒன்றுபட்டுள்ளன என்றார் ட்ரம்ப்.

ஏறக்குறைய அரை மணி நேரம் நீடித்த அவரது பேச்சு கைதட்டல்களாலும் ஆரவாரங்களாலும் நிரம்பியது. அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் பேசினார். இந்த நிலையில் இரு தரப்பு அரசு ரீதியான பேச்சுவார்த்தைகள் இன்று டெல்லியில் நடைபெற உள்ளன.

இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்ப்புக்கு வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது.

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon