மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

நாள்தோறும் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றத்தின் போது தங்கம் விலை சர்வதேசச் சந்தைகளில் கடுமையாக உயர்ந்தது. அப்போது முதல் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த தங்கத்தின் விலை கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்துத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்பதால் தற்போது பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றத்தில் உள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.272 உயர்ந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 168 உயர்ந்து ரூ. 32,576க்கு விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் இன்றைய நிலவரப்படி ரூ. 34,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 21 அதிகரித்து ரூ. 4,072 ஆக விற்பனையாகிறது. இதன்மூலம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தைத் தாண்டி இரண்டாவது நாளாக விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ. 52.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

-கவிபிரியா

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon