மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

சிஏஏ குறித்து டிரம்ப் மோடியுடன் பேசுவார்: அமெரிக்கா

சிஏஏ குறித்து டிரம்ப் மோடியுடன் பேசுவார்: அமெரிக்கா

பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்காக பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ‘இந்தியா வரும் டிரம்ப் சிஏஏ சட்டம் குறித்தும் பிரதமர் மோடியோடு பேசுவார்’என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிகாரிகள்,

“டிரம்ப் இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை குறைக்க ஊக்குவிப்பார். ஜனநாயக வழிமுறைகள் மற்றும் மரபுகளை இந்தியா கடைபிடிப்பது குறித்து அமெரிக்காவின் கவலை அதிகரித்து வரும் நேரத்தில்.... சிஏஏ, என்.ஆர்.சி குறித்தும் அமெரிக்க அரசு அக்கறை கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இந்த பிரச்சினைகள் குறித்து டிரம்ப் பேசுவார். குறிப்பாக, டிரம்ப் தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு மிக முக்கியமான மத சுதந்திர பிரச்சினையை எழுப்புவார், அத்துடன் ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரத்தின் பகிரப்பட்ட மரபுகளை விவாதிப்பார். பொதுவெளியிலோ அல்லது நிச்சயமாக தனிப்பட்ட முறையிலோ இது நடக்கும்” என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஏற்கனவே சிலமுறை டிரம்ப் முன் வந்தும் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது நினைவில் கொள்ளத் தக்கது.

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon