மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டிஎன்பிஎஸ்சி விவகாரம்: தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு!

டிஎன்பிஎஸ்சி விவகாரம்: தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு!

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் தயாநிதி மாறன் எம்.பி.மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன் ஜனவரி 30ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். வழக்கை சிபிஐக்கு மாற்றினால் உண்மை வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். திமுகவினர் தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தயாநிதி மாறன் மீதும், இதுதொடர்பாக செய்தி வெளிட்ட நாளிதழ் ஒன்றின் மீதும் வழக்குத் தொடரவுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறாக பேசியதாகக் கூறி, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை சார்பில், அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆதாரம் இன்றி உண்மைக்கு புறம்பாக தயாநிதி மாறன் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் தலைமைச் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon