மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 81 வயதாகும் அவர் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுவந்தார்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 21) பிற்பகல் 3 மணியளவில் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக துரைமுருகனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே துரைமுருகன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து கொஞ்ச நேரத்தில் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கின்றனர்.

மின்னம்பலம் டீம்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon