மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

தங்கம் விலை: வரலாறு காணாத அளவு உயர்வு!

தங்கம் விலை: வரலாறு காணாத அளவு உயர்வு!

இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 32, 000 ரூபாயை தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சீனாவில் பரவிவரும் கொரோனோ வைரஸின் தாக்கம் உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்து ஒரு சவரன் 31, 840 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் 3, 980 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 21) ஒரு சவரனுக்கு 272 உயர்ந்து 32,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராமிற்கு 32 ரூபாய் உயர்ந்து 4,012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து, 52.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தையும், ஒரு சவரன் 32 ஆயிரத்தையும் தாண்டுவது இதுதான் முதல் முறை.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon