மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

ஸ்டாலின் உடல் நலனுக்கு என்னாச்சு?

ஸ்டாலின் உடல் நலனுக்கு என்னாச்சு?

எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சில நாட்களாக சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும்போது சற்று டல்லாகவே இருந்தார். நேற்று சபைக்கு வந்தவர் கொஞ்ச நேரத்தில் வெளியே சென்றுவிட்டார். இன்றும் (பிப்ரவரி 19) சபைக்கு வந்த ஸ்டாலின் அடிக்கடி தனது அறைக்கு செல்வதும் இருக்கைக்கு வருவதுமாகவும் இருந்தார்.

இதைப் பார்த்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ‘தலைவருக்கு என்னாச்சு டல்லா இருக்காரே?’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஸ்டாலினுக்கு நெருக்கமான சில திமுக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டபோது, “தலைவருக்கு சைனஸ் பிரச்சினை மூனு நாளா தொந்தரவு பண்ணுது. மூக்கு அடைச்சிருக்கு. நேற்று முன் தினம் டாக்டரிடம் சென்றார். ஏ.சியில் ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்னு டாக்டர் அட்வைஸ் பண்ணிருக்காரு. சட்டமன்றத்துல ஏசி அதிகமா இருக்கும். அதனால சட்டமன்றத்துக்கு போகாம ரெஸ்ட் எடுக்குமாறு டாக்டர் சொல்லியிருக்கிறார். ஆனால் சட்டமன்றமே நாலஞ்சு நாள்தான் நடக்குது. அதுக்கும் போகாம இருந்தா எப்படி என்று சொல்லிவிட்டு சட்டமன்றம் வந்துவிட்டார். சைனஸ் பிரச்சினையால்தான் அடிக்கடி தன் அறைக்கு செல்வதும் கஷாயம் குடிப்பதுமாக இருந்தார். இன்றும் துரைமுருகன் பேசியதும் கிளம்பிவிட்டார் ” என்கிறார்கள்.

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon