மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

இந்தியச் சந்தைகளில், தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 19) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை நிலையில்லாத தன்மையாக இருந்து வருகிறது.

22கேரட்

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 31,624க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.3953 ஆக உள்ளது. நேற்று ரூ.3,926ஆக இருந்த நிலையில் இன்று கிராமிற்கு 27 ரூபாய் உயர்ந்துள்ளது.

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை, நேற்று ஒரு கிராம் ரூ.4,122க்கு விற்பனையான நிலையில் இன்று 29 ரூபாய் உயர்ந்து ரூ.4,151க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் ஒரு சவரன் 24 கேரட் தங்கம், 32,976 ரூபாயிலிருந்து இன்று 33,208ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னையைப் போன்று இந்தியாவின் கொல்கத்தா மும்பை என முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிராம் கொல்கத்தாவில் ரூ.4,029 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் அதிகரித்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.60 ரூபாயிலிருந்து 51.60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

-கவிபிரியா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon