�கத்தியின்றி ரத்தமின்றி ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு: அழைக்கும் அமைச்சர்!

public

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மட்டுமே அல்ல, அதை ஆண்களும் செய்துகொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (பிப்ரவரி 19) சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இன்று கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவன், ‘குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில் எவ்வளவு நடைபெறுகின்றன?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்பக் கட்டுப்பாடு எனப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் பெண்களுக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும். தகுதியுள்ள, விருப்பமுள்ள ஆண்களும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன் வர வேண்டும். காலை முதல் மாலை வரை பெண்களுக்கு செய்யப்படுகிற குடும்ப நல அறுவை சிகிச்சை, ஆண்களுக்கு ஒரு மணி நேரத்தில் கத்தியின்றி ரத்தமின்றி செய்து முடிக்கும் புதிய சிகிச்சை முறையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் செய்துகொண்டிருக்கிறோம். இதை ப்ரமோட் செய்ய வேண்டும்.

குடும்ப நல அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மாத்திரம் அல்ல, அதில் ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆண்களும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது. கடந்த ஆண்டு 80 ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். இந்த ஆண்டு 800 ஆண்களுக்கு செய்திருக்கிறோம். மேலும் பல ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய அரசு தயாராக இருக்கிறது. விழிப்புணர்வோடு ஆண்கள் இதற்கு முன் வரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

குடும்ப கட்டுப்பாடு என்ற முக்கியமான விஷயம் பற்றி அமைச்சர் பேசிக் கொண்டிருக்கையில் சக அமைச்சர்களே சிரித்துக் கொண்டிருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *