மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

கொரோனா பாதிப்பு : தமிழில் விளக்கும் சீனப் பெண்!

கொரோனா பாதிப்பு : தமிழில் விளக்கும் சீனப் பெண்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பலவிதமான தகவல்கள் தினம்தோறும் வந்தபடியே உள்ளன. மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள், உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, அடிப்படை தேவைகளுக்கே மக்கள் அல்லாட வேண்டியுள்ளது எனத் தகவல்கள் பரவி வரும் இந்த நேரத்தில் சீனாவிலிருந்து பெண் ஒருவர், அங்கே நிலைமை எவ்வாறு உள்ளது என தமிழில் விளக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தன்னை இலக்கியா என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த பெண், சீனாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சாலைகளில் கூட்டம் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார். சீனாவில் பேருந்துகள் இயங்குவதையும், உணவுப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருப்பதையும், அதில் மக்கள் வந்து வாங்கி செல்வதையும் வீடியோவில் விளக்குகிறார். மேலும் அந்த வீடியோவில் சீன அரசு, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து வருவதாகவும், ஆதரவு தெரிவித்துவரும் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

-பவித்ரா குமரேசன்

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon