மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: மோடி பங்கேற்பாரா?

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: மோடி பங்கேற்பாரா?

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 14) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவாலையும், மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லோட், இம்ரான் ஹூசேன், ராஜேந்திர கௌதம் ஆகிய 6 பேரை அமைச்சர்களாகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்,

பதவி ஏற்பு விழாவுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி சார்பில், விழாவில் பங்கேற்க டெல்லி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேசமயத்தில் , தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், ”முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி நாளை தனது சொந்த தொகுதியான வாரணாசிக்குச் செல்லவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நவீன மருத்துவமனையைத் திறந்து வைத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளார். எனவே நாளை காலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் விழாவில் பிரதமர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon