மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஜெயக்குமார் கூட்டாளிகள் சரண்!

 டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஜெயக்குமார் கூட்டாளிகள் சரண்!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரின் இரண்டு கூட்டாளிகள் இன்று (பிப்ரவரி 14) சரணடைந்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பலர் கைதாகி வருகின்றனர். இதுவரை கைது எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. ஜெயக்குமாரைக் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரிடம் இருந்து மேலும் விவரங்களைப் பெற முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் ஜெயக்குமாரின் இரு கூட்டாளிகள் இன்று (பிப்ரவரி 14) நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திருச்சி துறையூரைச் சேர்ந்த செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் மூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது விடைகள் தயார் செய்து கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

அதுபோன்று ஜெயக்குமாரின் மற்றொரு கூட்டாளியான பிரபாகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் வரும் 17ஆம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

இதனிடையே டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைது செய்யப்பட்ட வினோத்குமார், ஸ்ரீனிவாசன், ராஜசேகர் ஆகியோரின் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இவர்கள் மீதான விசாரணை ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதால் போலீஸ் தரப்பில் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon