மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

நிர்மலா சீதாராமனை முந்திய ஓபிஎஸ்

நிர்மலா சீதாராமனை முந்திய ஓபிஎஸ்

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.

சரியாகக் காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், பிற்பகல் 1:42 மணிக்கு தனது உரையை முடித்தார். அதாவது 159 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தார். இறுதியாக உடல் நிலை முடியாத காரணத்தால், உரையை முழுமையாக வாசிக்க முடியவில்லை என்று கூறி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது தான் நீண்ட பட்ஜெட் உரையாக இருந்தது. குறிப்பாகத் தனது முந்தைய சாதனையையே நிர்மலா சீதாராமன் முறியடித்திருந்தார். 2019 இடைக்கால பட்ஜெட்டின் போது 137 நிமிடங்கள் உரையை வாசித்திருந்தார்.

இன்று தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு வாசிக்கத் தொடங்கிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சுமார் 196 நிமிடங்கள் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றினார். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையைக் காட்டிலும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூடுதலாக 37 நிமிடங்கள் வாசித்திருக்கிறார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்தார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இதிலிருந்தே பாஜக அரசை, அதிமுக அரசு எவ்வாறு பின்பற்றுகிறது என்று தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

-கவிபிரியா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon