மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

காவல் நிலையத்திலேயே திருட்டு : காவலர் புகார்!

காவல் நிலையத்திலேயே திருட்டு : காவலர் புகார்!

பூக்கடை காவல் நிலையத்தில் வைத்திருந்த தனது பெட்டியைக் காணவில்லை என்று போலீசார் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் காவல் நிலையத்திலேயே திருட்டா என்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினசரி செய்தித்தாள்களில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளை, நகைக் கடைகளில் துணிகரம் எனப் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பான செய்திகளைப் பார்த்திருப்போம். இப்படி வீடுகளிலோ, கடைகளிலோ கொள்ளை நடந்தால் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே பெட்டியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பூக்கடை போக்குவரத்து காவல் நிலைய ஓய்வறையில் வைத்திருந்த இரும்புப் பெட்டியைக் காணவில்லை என காவலர் ஒருவர் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

பூக்கடை காவல் நிலையம், போக்குவரத்து பிரிவில் முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி 20ஆம் தேதி அளித்துள்ள புகாரில், காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் கடந்த 8 மாதமாக வைத்திருந்த எனது இரும்புப் பெட்டியைக் காணவில்லை. அதனை எடுத்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களிடம் இருந்து இரும்புப் பெட்டியைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது இந்த புகார் கடிதம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காவல்நிலையத்திலே பாதுகாப்பு இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கவிபிரியா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon