oகடலைக்குள் காசு: 45 லட்சம் கடத்தல் பின்னணி!

public

நிலக்கடலை மற்றும் பிஸ்கெட் பாக்கெட்களுக்குள் மறைத்து வைத்து, 45 லட்ச ரூபாயைக் கடத்த முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

2009-ஆம் ஆண்டு வெளியான ‘அயன்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா கடத்தல் கொள்ளையனாக நடித்திருப்பார். போதைப் பொருட்களையும், தங்கம், வைரம், பணம் என்று விலையுயர்ந்த பொருட்களையும் அநபுத்திசாலித்தனமான வழிகளில் அவர் கடத்திகொண்டு வரும் காட்சிகளை அனைவரும் பார்த்து ரசித்திருப்போம். நிஜ வாழ்க்கையிலும் சிலர் இத்தகைய வழிகளைக் கையாண்டு, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை செய்திகளில் நாம் பார்த்திருப்போம். தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று நினைத்து அசட்டு தைரியத்தில் இருக்கும் இவர்கள், தங்களை விடவும் காவல் துறை அதிக புத்திசாலிகள் என்பதைப் பல நேரங்களில் மறந்துவிடுகின்றனர்.

அவ்வாறு மறந்து போய் மிக நுணுக்கமான முறைகளைக் கையாண்டு ‘மாட்டவே மாட்டோம்’ என்ற மன தைரியத்தில் 45 லட்ச ரூபாயை இந்தியாவிற்குள் கடத்தி வர முராத் அலாம் என்பவர் திட்டமிட்டுள்ளார். இந்தக் கடத்தலுக்கு அவர் உணவுப் பொருட்களை உதவிக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டுப் பணத்தாளை மிகச்சிறிய அளவில் சுருட்டி அதனை நிலக்கடலைத் தோலுக்குள் மறைத்து வைத்துள்ளார். பின்னர் மிகத் திறமையான வழிகளைக் கையாண்டு அதன் தோல்களை மீண்டும் இணைத்துள்ளனர். பார்த்ததும் எந்த வித சந்தேகத்திற்கும் இடம் தராமல் நிஜமான நிலக்கடலை போன்றே அவை தோற்றமளிக்கின்றன. ஆனால் சோதனையில் தான் கடலைக்குள் மறைத்து வைத்திருந்த காசைப் பற்றித் தெரியவந்துள்ளது.

அதே போன்று பிஸ்கெட் பாக்கெட்டுக்குள், முதல் பிஸ்கெட்டை மட்டும் எடுத்து விட்டு, மற்றவற்றில் ஒரு துளையை ஏற்படுத்தியுள்ளனர். அதற்குள் பணத்தை சுருட்டி திறம்பட மறைத்து வைத்துள்ளனர். பிஸ்கெட் கவரைத் திறந்து பார்க்கும் போது சந்தேகமே எழாத வகையில், மிகச் சாதரணமாகத் தெரிகிறது.

டெல்லி விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும் போது அதிகாரிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர். முராத் அலாம் என்ற பயணியால் இவ்வாறு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 45 லட்ச ரூபாய் என இந்திய அரசின் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நிலக்கடலை, பிஸ்கெட் மற்றும் இதர உணவுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து அவர் கடத்தி வந்த வெளிநாட்டுப் பணத்தைக் கைபற்றியதுடன், சுங்கத் துறை அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *