மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

நித்யானந்தா சீடர் கொலை!

நித்யானந்தா சீடர் கொலை!

சர்ச்சை சாமியாரான நித்யானந்தாவை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது சீடர் ஒருவர் புதுச்சேரியில் கொல்லப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை, கடத்தல் என நித்யானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஈகுவாடர், பசுபிக் தீவான வனுவாட்டு ஆகிய இடங்களில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவரது சீடர் மாயமாகி பின்னர் சடலமாக மீட்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக கைலாசா செல்வதாகக் கூறி சென்ற நித்தியின் சீடர் ஒருவர் நேபாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தநிலையில் புதுச்சேரியில் நித்தியின் நெருங்கிய சீடர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல் நித்தியின் தீவிர சீடராக இருந்து வந்துள்ளார். அதன் விளைவாக நித்தியின் பேரில் பல இடங்களில் பேக்கரி நடத்தி வந்துள்ளார். விரைவில் நித்தி பேரிலேயே மற்றொரு பேக்கிரியைத் திறக்கவும் அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குருவிநத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் இதுகுறித்து அவரது மனைவி நேற்று அதிகாலை 4 மணியளவில் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகூர் போலீசார் , வஜ்ரவேலை தீவிரமாக தேடி வந்தனர். குருவி நத்தம் பகுதியில் சந்தேகிக்கப்படும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்ததில் அதில் வஜ்ரவேல் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

ரூ.2 லட்சம் பணத்துடன் வந்த வஜ்ரவேலை, மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். அவரின் தலையில் பாலிதீன் கவரை கொண்டு சுற்றியும், உடலை நிர்வாணமாக்கியும், அவரை பின்பக்க இருக்கையில் படுக்க வைத்துவிட்டும் சென்றுள்ளனர். நித்தியின் நெருங்கிய சீடரான இவர், கொலை செய்யப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இவரது கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பணத்துக்காகக் கொல்லப்பட்டாரா? அல்லது வேரேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020