மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

கொரோனா: சீனாவிலிருந்து தமிழகம் வந்த 15,000 பேர்!

கொரோனா: சீனாவிலிருந்து தமிழகம் வந்த 15,000 பேர்!

கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் 68 பேர் கண்காணிப்பில் இருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை யாரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் ஆனால், சிலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா அறிகுறியுடன் யாரும் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிவந்த நிலையில், 68 பேர் கண்காணிப்பில் இருப்பதாக அத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் உயரதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சீனாவிலிருந்து சென்னைக்கு 15,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். அவர்களுள் 68 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 10 சீனர்கள் 58 இந்தியர்கள் என மொத்தம் 68 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020