மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

கருக்கலைப்பு: காலவரம்பை அதிகரித்து ஒப்புதல்!

கருக்கலைப்பு: காலவரம்பை அதிகரித்து ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில், நேற்று (29.01.2020) டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கருக்கலைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம், கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கருக்கலைப்பு உள்ளிட்ட சில சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கருக்கலைப்புத் தொடர்பான சட்டம் 50 ஆண்டுகளாக அமலில் உள்ளது. தற்போது 1971ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ‘கர்ப்பத்தைக் கலைப்பதற்கான கால வரம்பு 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது’.

பாலியல் பலாத்காரத்தினால் உருவான கரு, இயல்புக்கு மாறான வளர்ச்சி கொண்ட கரு ஆகியவை 20 வாரங்களுக்கு மேலாக வளர்ச்சி பெற்றிருந்தாலும் அதைக் கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என அனுஷ்கா ரவீந்திரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதற்கான நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை உருவாக்க மத்திய சுகாதாரம், குழந்தைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சலிடமும் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போதைய மத்திய அமைச்சரவையில் கருக்கலைப்பு திருத்தத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின்படி தாய் அல்லது கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்பட்சத்தில் 24 வாரங்களுக்குள் கருவைக் கலைக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவை வரக்கூடிய கூட்டத்தொடரில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020