ஜனாதிபதி முடிவில் தலையிட முடியாது: நிர்பயா வழக்கில் நீதிமன்றம்!

public

நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்தும், கருணை கோரியும் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளித்திருந்தார், இந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வந்தது. அப்போது குற்றவாளியின் தரப்பில், சிறையில் தான் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று விசாரணைக்கு வந்த போது முகேஷ் குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. , “குடியரசுத் தலைவர் கருணை மனுவை முறையாகத்தான் பரிசீலித்துள்ளார். அவரின் மனதை முழுமையாகச் செலுத்தி சீரிய ஆய்வுக்குப் பின்பே அவர் கருணை மனுவை நிராகரித்துள்ளார்.

கீழமை விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த அனைத்துத் தீர்ப்புகள் ஆவணங்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவை அனைத்தையும் பரிசீலித்த பிறகு கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை. அவ்வாறு தலையிடவும் முடியாது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *