8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பா?

public

8ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்குத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

நடப்பு ஆண்டு முதல் 5மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. சிறுவயதிலேயே மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்வதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனினும் பொதுத் தேர்வு நடத்துவதில் தமிழக அரசு திட்டவட்டமாக இருக்கிறது.

இந்த நிலையில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தினசரி மாலை வேளையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களைப் போல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு அறிவிக்கப்பட்டது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி நேரத்தைத் தவிரக் கூடுதலாக மாணவர்களுக்கு வகுப்பை நடத்தினால் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள் என்று எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள, தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி, ”தற்போது இருக்கும் சூழலில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்பதுதான் பள்ளிக் கல்வித் துறையின் நிலைப்பாடு. கடந்த 2019 செப்டம்பர் 22ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்துத் தவறுதலாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மாலை வேளையில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *