ராம்நாத் கோயங்கா விருது: வென்றவர்கள் யார்? எதற்காக?

public

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் சிறந்த பத்திரிகையாளர்களை கெளரவிக்கும் வகையில் ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நினைவுகளைப் போற்றும் விதமாக, 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஊடகத் துறை சாதனையாளர்களுக்கு ’ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை, டிஜிட்டல் மீடியா மற்றும் சேனல்கள் மூலமாக மிகவும் சிறப்புமிக்க செய்திகளை, கவனமாகத் தொகுத்து வழங்கும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது கடந்த திங்கள் அன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ’பிரேக்கிங் நியூஸ்’ என்ற நோய்க்குறியின் காரணமாகப் போலிச் செய்திகள் ஓர் அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. இதுபோன்ற செய்திகளை வெளியிடுபவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்களாக அறிவித்துக் கொண்டு இந்த உன்னத தொழிலைக் களங்கப்படுத்தப்படுகின்றனர். ‘ஐந்து w மற்றும் h’ , அதாவது எப்போது, ஏன், எங்கே, யார் மற்றும் எப்படி என்ற அடிப்படைகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே மாவோயிஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் மாநிலத்தில் உள்ள பஸ்தர் காடுகளில் நடப்பது தொடர்பான தகவல்கள் முதல் சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் வரை மிகவும் முக்கியமான செய்திகளை வெளியுலகத்துக்குத் தந்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கினார்.

விருதை வென்றவர்கள் யார்? எதற்காக?

தீபங்கர் கோஸ், *இந்தியன் எக்ஸ்பிரஸ்* (அச்சு / டிஜிட்டல்): சத்தீஸ்கரில் மாநிலத்துக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையிலான சண்டையில் காடுகள் இழப்பு குறித்த கட்டுரைக்கு வழங்கப்பட்டது.

தீரஜ் குமார், மறைந்த ஆச்சுதா நந்தா சாஹு மற்றும் மோர்முகுட் சர்மா, *தூர்தர்ஷன்* (ஒளிபரப்பு): நிலவாய கிராமத்திலிருந்து சத்தீஸ்கர் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க சென்றபோது டி.டி செய்தி குழு நக்சல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் சாஹு உயிர் இழந்தார்.

இந்தி பிரிவில், திதி பாஜ்பாய், *காவ்ன் இணைப்பு* (அச்சு / டிஜிட்டல்): சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது தொடர்பான சீரிஸுக்கு வழங்கப்பட்டது.

சதாப் அஹ்மத் மொய்ஜீ, *தி குவிண்ட்.காம்* (ஒளிபரப்பு): முசாபர் நகர் கலவரத்தில் காணாமல் போன குடும்பங்களின் வேதனையான காத்திருப்பு குறித்த அறிக்கைக்கு வழங்கப்பட்டது.

பிராந்திய பிரிவில், அன்வேஷா பானர்ஜி, *இஐ சாமே* (அச்சு / டிஜிட்டல்); சனீஷ் டி.கே., *மனோரமா செய்தி* (ஒளிபரப்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திப் பிரிவில், மிருதுலா சாரி & வினிதா கோவிந்தராஜன், *ஸ்க்ரோல்.இன்* (அச்சு / டிஜிட்டல்): சர்வபிரியா சங்வான், *பிபிசி செய்தி இந்தி* (ஒளிபரப்பு) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஹினா ரோஹ்தகி, *தி இந்தியன் எக்ஸ்பிரஸ்* (அச்சு / டிஜிட்டல்): ஹரியானா மாநிலம் மோர்னியில் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் காகர் ஆற்றைக் கடந்து செல்வது அல்லது 20 அடி குழாய் பைப்லைன் வழியாகச் செல்வது குறித்த கட்டுரைக்கு வழங்கப்பட்டது.

அஸ்மிதா நந்தி மற்றும் மேக்னாட் போஸ், *தி குவிண்ட்.காம்* (ஒளிபரப்பு): பசுவின் பெயரில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான டாக்குமெண்ட்ரிக்கு வழங்கப்பட்டது.

வணிகம் மற்றும் பொருளாதார இதழியல் பிரிவில், *தாம்சன் ராய்ட்டர்ஸ்* (அச்சு / டிஜிட்டல்) நிறுவனத்தின் நித்தி வர்மாவுக்கு வழங்கப்பட்டது.

சுஷாந்த் குமார் சிங், *தி இந்தியன் எக்ஸ்பிரஸ்* (அச்சு / டிஜிட்டல்): ஆண்டின் மிகப் பெரிய இடைவெளிகளில் – ரஃபேல் பேச்சு முதல் நாகா ஒப்பந்தம் வரை என்ற கட்டுரைக்கு வழங்கப்பட்டது.

அரசியல் மற்றும் அரசு பிரிவில், சுஷாந்த் குமார் சிங், *தி இந்தியன் எக்ஸ்பிரஸ்* (அச்சு / டிஜிட்டல்); மௌமிதா சென், *இந்தியா டுடே டிவி* (ஒளிபரப்பு): ஷிகா, *இந்தியா டுடே டிவி* (ஒளிபரப்பு) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

புலனாய்வு பிரிவில் மிண்ட் (அச்சு / டிஜிட்டல்) ஊடகத்தின் தீனா தாக்கருக்கு வழங்கப்பட்டது. அதுபோன்று தி குவிண்டின் பூனம் அகர்வாலுக்கும் ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது.

குடிமை இதழியல் பிரிவில், நியூஸ் 18.காம் (அச்சு / டிஜிட்டல்) அனிருத்தா கோசலுக்கு விருது வழங்கப்பட்டது. புகைப்பட பத்திரிகையாளர் பிரிவில், சி.சுரேஷ் குமார், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (அச்சு / டிஜிட்டல்): ஜல்லிக்கட்டு போன்றவை தொடர்பான புகைப்படங்களுக்கு வழங்கப்பட்டது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *