nசீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்!

public

தங்களது இணையதளத்தில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கின் பெயர் ஆபாசமாக மொழிபெயர்க்கப்பட்டதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

சீன அதிபர் ஷீ ஜின்பிங், ஜனவரி 18-ஆம் தேதி மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது சீனா-மியான்மர் நாட்டிற்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகியை கடந்த சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு சந்தித்துப்பேசினார். அந்த சந்திப்பின் போது இரு நாட்டிற்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இந்த சந்திப்பு தொடர்பாக மியான்மர் அரசு தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதில் பர்மீய மொழியில் இடப்பட்டிருந்த பதிவில் சீன அதிபரின் பெயர் ஆபாசவார்த்தையாகப் பொருள் கொள்ளும் விதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது. பர்மீய மொழியில் திரு.ஷீ ஜின்பிங் என இருந்தது ஆங்கிலத்தில் ‘Mr.Shithole’ எனத் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்தநிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. “இது தவறுதலாக நடந்த விஷயம், இந்த மொழிபெயர்ப்புக்குத் தொழில்நுட்ப பிரச்னை தான் காரணம். அதனை நாங்கள் சரிசெய்துவிட்டோம். இந்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு வேண்டுகிறோம். தொடர்ந்து இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று ஃபேஸ்புக் தரப்பில் கூறப்பட்டது. மியான்மரின் அதிகாரப்பூர்வ மொழியான பர்மீய மொழியை மியான்மர் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே, சீன நாட்டில் முக்கிய நகரங்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஃபேஸ்புக் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கக் கோரி ஃபேஸ்புக் வைத்த கோரிக்கையையும் சீன அரசு நிராகரித்தது. இந்த நிலையில் சீன அதிபரை அவமதிக்கும் விதமான இந்த மொழிபெயர்ப்பிற்கு சீனாவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *