மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் கைது!

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் கைது!

தமிழகமெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளைப்பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதனைத் தொடர்ந்து வில்சனை சுட்டுக்கொன்ற அப்துல் ஷமீம், தெளபீக் ஆகிய இருவரையும் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி கர்நாடக போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த கொலைக்கு தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்னும் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று கொலையாளிகளுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்த இஜாஸ் பாஷா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கு மூளையாக முக்கிய தீவிரவாதி ஒருவர் செயல்பட்டது தெரியவந்தது. அவர் இந்த கொலைக்கு உத்தரவுகளை பிறப்பித்ததும், அவர் பெங்களூரில் பதுங்கி இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷாவை போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில் இன்னும் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon