மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

2020-இன் முதல் செயற்கைக்கோள்: வெற்றிகரமான ஜிசாட்!

2020-இன் முதல் செயற்கைக்கோள்: வெற்றிகரமான ஜிசாட்!

2020-ஆம் ஆண்டுக்கான இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30 இன்று(ஜனவரி 17) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதிக எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏரியான்-5 என்னும் ராக்கெட் மூலமாக இன்று அதிகாலை 2.35 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள் 3357 கிலோ எடை கொண்டது.

பதினைந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் தொலைதொடர்பு சேவைகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, தொலைக்காட்சி, டிடிஹெச், டெலிபோர்ட் போன்றவற்றின் சேவைகளை இந்த செயற்கைக்கோள் தரவுள்ளது. ஏரியான்-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து 38-ஆவது நிமிடத்தில் ஜிசாட்-30 செயற்கைக்கோளை திட்டமிட்டபடி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் விடுவித்தது. இந்த மகிழ்ச்சிகரமான தகவலை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜிசாட்-30 செயற்கைக்கோள், கியூ-பேண்ட்டில் உள்ள இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளையும், சி-பேண்டில் உள்ள வளைகுடா நாடுகள் மற்றும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏராளமான பகுதிகளையும் உள்ளடக்கி தனது வேலையைச் செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் தங்களது முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை இஸ்ரோ மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon