மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

நீட்: தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர்!

நீட்: தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர்!

மருத்துவப் படிப்புக்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான எதிர்ப்பு இன்னும் குறையாத நிலையில், ‘நீட்’ தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், தமிழகத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு எழுதுபவர்கள் அதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம் (டிசம்பர்) 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது. முதலில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜனவரி 6ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. தேர்வு கட்டணத்தையும் விண்ணப்பதாரர்கள் செலுத்திவிட்டனர்.

அந்த வகையில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துத் தேர்வு எழுத இருக்கின்றனர். இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று (ஜனவரி 15) முதல் 31ஆம் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020