மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

வண்டலூர் உயிரியல் பூங்கா: சிறப்பு ஏற்பாடுகள்!

வண்டலூர் உயிரியல் பூங்கா: சிறப்பு ஏற்பாடுகள்!

பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக பிறந்த இரண்டு புலிக்குட்டிகளைப் பொதுமக்கள் பார்வையிடவும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 27 புலிகள் உள்ளன. அவற்றுள் ஆதித்யா மற்றும் ஆர்த்திக் என்று பெயரிடப்பட்ட புலிகளுக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டு குட்டிகள் பிறந்தன. இந்த இரண்டு குட்டிகளும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறை தினங்களையொட்டி, வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு இந்தப் புலிக்குட்டிகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் திரையின் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தை மாதத்தில் சிறப்பாகக் கிடைக்கும் கரும்பு, பூங்காவில் உள்ள யானைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொங்கல் விடுமுறையில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் யானையின் இருப்பிடத்துக்குச் சென்று காலை 11 மணியளவில் மற்றும் மதியம் 3 மணியளவில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தினங்களான நேற்று (ஜனவரி 14) முதல் வருகிற 19ஆம் தேதி வரை பூங்காவுக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020