மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

வேலைவாய்ப்பு: சென்னை கூட்டுறவு சங்கங்களில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை கூட்டுறவு சங்கங்களில் பணி!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்க்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 300

பணியின் தன்மை: உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி சென்னை - 1, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சென்னை - 4, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சென்னை - 18, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் சென்னை - 93, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சென்னை - 10 ஆகிய சங்கங்களில் பணிகள் நிரப்பப்படவுள்ளன)

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10 + 2 + 3 என்ற அடிப்படையில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/- மாற்றுத்திறனாளிகள், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020