மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

எஸ்.எஸ்.ஐ.வில்சன் திட்டமிட்டு கொலை: கேரள போலீஸ்!

எஸ்.எஸ்.ஐ.வில்சன் திட்டமிட்டு கொலை: கேரள போலீஸ்!

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சனை, திட்டம் தீட்டிக் கொன்றுள்ளதாகக் கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகத் தமிழக கேரள போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், எஸ்.எஸ்.ஐ கொல்லப்பட்ட விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கன்னியாகுமரியைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இருவர் வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு பள்ளிவாசல் வழியாகத் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் தேடி வரும் நிலையில், வில்சனை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாகக் கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரை பகுதியில் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குற்றவாளிகள் நடமாடுவது குறித்த வீடியோ கிடைத்துள்ளதாகக் கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்துக்கு முன்பு இரு நாட்களாக அவர்கள் நெய்யாற்றின்கரை பகுதியில் வசித்து வந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்றுள்ளனர். அவர்கள் கொலை செய்ய ஆட்டோவில் சென்றதாகவும் அப்போது அவர்களிடம் இருந்த கருப்புப் பை அதன் பிறகு காணவில்லை. அன்றைய தினம் முழு கடையடைப்பு என்பதால் அவர்கள் ஆட்டோவிற்கு ரூ.400 கொடுத்து வந்துள்ளனர் என்றும் கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று, சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் தலைமைச்செயலகத்தில் வைத்து முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

முதல்வருடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எஸ்.எஸ்.ஐ வில்சன் மனைவி, எனது கணவரைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தகுந்த தண்டனை வாங்கி தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். எனக்கு ஏற்பட்ட கொடுமை யாருக்கும் ஏற்படக்கூடாது. மூத்த மகளுக்குத் தகுந்த அரசு வேலை தருவதாக முதல்வர் கூறினார் என்று தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 13 ஜன 2020