மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

சிஏஏ: பிரதமரின் பிறந்த தேதி என்ன? - இனிகோ இருதயராஜ்

சிஏஏ: பிரதமரின் பிறந்த தேதி என்ன? - இனிகோ இருதயராஜ்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் நேற்று (ஜனவரி 12) கருத்தரங்கம் நடைபெற்றது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், பேராயர் எஸ்றா சற்குணம், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தி.க பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய இனிகோ இருதயராஜ், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. புதிதாக ஒரு சட்டம் கொண்டுவந்து நமது பிறப்புச் சான்றிதழ் கேட்க இருக்கிறார்கள். அப்பா, அம்மாவுடைய பிறப்புச் சான்றிதழ்களைக்கூட கேட்கிறார்கள். ஏனெனில் அதில்தான் பிறந்த இடம் இருக்கும். மற்ற சான்றிதழ்களில் இருக்காது. நான் பிறந்த தேதியே எனக்குத் தெரியாது. அதில் எனது அப்பா, தாத்தா பிறந்த தேதியெல்லாம் வேண்டுமென்றால் இது நடக்கிற காரியமா?

பிரதமர் மோடியின் பிறந்த தேதி என்ன என்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் அவரே தனது வேட்புமனுவில் இரண்டு பிறந்த தேதிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கே பிறந்த தேதி தெரியவில்லை என்றால் அடிமட்டக் குடிமக்களுக்குத் தெரியுமா?” என்று பல கேள்விகளை எழுப்பினார்.

மாணவர்கள் மீது குண்டுபோடுவோம் என்று சொன்ன ஹெச்.ராஜாவை கைது செய்ய யாருக்கும் அருகதையில்லை. ஆங்கிலேயர்களின் காலில் விழுந்து கிடந்த கூட்டம், சுதந்திரம் பெற்றுத் தந்த நம்மைப் பார்த்து இன்று போராடுகிறவர்களைத் தேசத் துரோகிகள் என்று சொல்கிறது. ஆம், தேசத் துரோகிகள்தான். ஆனால், இந்துத்துவ தேசத்துக்குத்தான் தேசத் துரோகிகள் என்று குறிப்பிட்ட இனிகோ இருதயராஜ்,

“இப்போது கொண்டுவரப்பட்ட சட்டங்கள் ஒருவகையில் பணமதிப்பழிப்பைப் போன்றதுதான். எத்தனை போராட்டங்கள் நடத்தினால் ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று கூறி தற்போது சட்டத்தையும் அமல்படுத்திவிட்டார்கள். உலகில் பல பாசிசங்களில் ஒன்றாக காவி பாசிசமும் உள்ளது. அதை எதிர்த்து தமிழகத்தில் கோலம் உள்ளிட்ட பல வகைகளிலும் மக்கள் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்” என்றும் கூறினார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 13 ஜன 2020