மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

சிஏஏவை முழுமையாக அமல்படுத்தும் வரை ஓயமாட்டேன்: அமித் ஷா

சிஏஏவை முழுமையாக அமல்படுத்தும் வரை ஓயமாட்டேன்: அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் எவ்வளவு எதிர்த்தாலும், மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த ஆறு சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கிய பின்னரே பாஜக அரசு ஓய்வெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (ஜனவரி 12) தெரிவித்துள்ளார்.

சிஏஏ சட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறது பாஜக. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசினார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா.

அப்போது அவர், “பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரும் இந்நாட்டின் மகன்கள், மகள்கள். நீங்களும் நானும் நாடு முழுவதும் அதே உரிமையை அனுபவிக்கிறோம். காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்றால், எஞ்சியிருக்கும் கட்சியும் அழிக்கப்படும். அவர்கள் தேசத்தின் துடிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மாறாக, அவர்கள் தங்கள் வாக்கு வங்கிக்கு அஞ்சுகிறார்கள்.

பிரிவினையின்போது மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு உட்பட பல தலைவர்கள், பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மையினரை அரவணைக்க முன்வந்தார்கள்” என்று பேசிய அமித் ஷா,

“நான் மனித உரிமை சாம்பியன்களைக் கேட்க விரும்புகிறேன். சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தானில் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருந்தபோது, ​அவர்கள் மனித உரிமைகளைப் பார்க்கவில்லையா? இந்த நபர்களுக்கும் அந்த உரிமைகள் இல்லையா? நங்கனா சாஹிப் மீதான தாக்குதல் இந்த அட்டூழியங்களை உலகிற்கு முன்னால் கொண்டு வந்துள்ளது.

பல தசாப்தங்களாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் சிறுபான்மையினர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். காங்கிரஸின் காது கேளாத மற்றும் பார்வையற்ற தலைவர்களிடம் இதுபற்றி நான் கேட்க விரும்புகிறேன். சிஏஏவை முழுமையாக அமல்படுத்திவிட்டுதான் நான் ஓய்வெடுப்பேன்” என்றார் அமித் ஷா.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 13 ஜன 2020