மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

கிச்சன் கீர்த்தனா: சேமியா பிரியாணி

கிச்சன் கீர்த்தனா: சேமியா பிரியாணி

விடுமுறை நாட்கள் கழிந்து வேலை நாட்கள் தொடங்கியதும் உணவகங்களுக்குப் போய் சாப்பிடுவது காலை வேளையிலேயே இப்போது அதிகமாகி வருகிறது. வீட்டில் சமைக்காத சில நேரங்களில் அல்லது ‘ஒரு மாறுதல் வேண்டும்’ என்பதைத் தாண்டி, விதவிதமான, வித்தியாசமான ரெசிப்பிகளைத் தேடித் தேடி சாப்பிடும் பழக்கம் வளர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்த சேமியா பிரியாணி செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு வீட்டிலேயே விருந்து படையுங்கள்.

என்ன தேவை?

சேமியா - 2 கப்

தண்ணீர் - 4 கப்

கேரட் - ஒன்று

பச்சைப் பட்டாணி - அரை கப்

பிரெட் ஸ்லைஸ் - 2

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தக்காளி - ஒன்று

புதினா இலைகள் - 6

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

பட்டை - அரை அங்குலத் துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

ஒரு கடாயைச் சூடாக்கி, சேமியா சேர்த்து 2-3 நிமிடங்கள் நடுத்தர தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்த சேமியாவைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ஊற வைக்கவும்.

சேமியாவைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இப்போது இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாக மாறும் வரை வேகவிடவும். பிறகு புதினா இலைகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான நீர், உப்பு, கரம் மசாலாத்தூள், பிரெட் ஸ்லைஸ் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து, காய்கறிகள் வேகும் வரை மூடி வேகவிடவும். சேமியாவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கி 2-3 நிமிடங்கள் வேகவிடவும். சேமியா பிரியாணி தயார். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: தினந்தோறும் அசைவ உணவு... நல்லதா, கெட்டதா?

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 13 ஜன 2020