மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

பெங்களூரு- டூ தென் அமெரிக்கத் தீவுகள்: நித்யானந்தா தப்பிய ரூட் !

பெங்களூரு- டூ தென் அமெரிக்கத் தீவுகள்: நித்யானந்தா தப்பிய ரூட் !

சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத நித்யானந்தா இப்போது எங்கிருக்கிறார் என்பது அடுத்த விவாதமாக ஆகியிருக்கிறது., நித்யானந்தா வெளியே வந்து சொற்பொழிவு ஆற்றி மாதக் கணக்கில் ஆகிறது. தன் மீதான பெங்களூரு நீதிமன்ற வழக்கின் நெருக்கடி அதிகமானதால் அவர் மாதக் கணக்கில் வெளியே தலைகாட்டாமல் யு ட்யூபிலேயே தலைகாட்டி வந்தார்.

இந்த நிலையில் பிடதியில் இருந்து பிரித்து அண்மையில் குஜராத்தில் அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் பல்வேறு வகையிலும் சித்ரவதைப்படுத்தப்படுகிறார்கள் என்ற சர்ச்சை வெடித்தது. நித்யானந்தாவிடம் செயலாளராக இருந்த ஜனார்தன சர்மா கொடுத்த புகார் விஸ்வரூபமாகியிருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஹீராபூரில் நகர் பகுதிக்கு வெளியே நித்யானந்தாவுக்கு ஆசிரமம் இருக்கிறது. டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனம்தான் நித்திக்கு தனது பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியையே ஆசிரமத்துக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில், ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இந்த நிலையில்தான், குஜராத் போலீசார், பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சோதனை நடத்தி ஏராளமான லேப்டாப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அகமதாபாத் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பல அரசுத் துறை அதிகாரிகள் ஆசிரமத்தை ஆய்வு செய்து அங்கிருந்தவர்களை வெளியேற்றி ஆசிரமத்தை மூடிவிட்டனர். இதனால் அந்த பள்ளியும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நித்யானந்தா மீது லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 44 வாய்தாக்களாக நித்யானந்தா ஆஜராகவில்லை.

இனியும் ஆஜரானால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்றும், தான் ஒருமுறை கைது செய்யப்பட்டுவிட்டால் இந்தியா முழுவதிலும் இருந்தும் புகார்கள் குவியும் என்றும் உறுதிசெய்துகொண்டுவிட்டார் நித்யானந்தா. மேலும் தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவில் இதற்கு முன்பு முரளி மனோஜர் ஜோஷி போன்றவர்கள் நித்திக்கு உதவி வந்தார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஆதரவுக் கரம் பாஜகவில் இல்லை என்பது நித்யானந்தாவுக்கு தெரிந்துவிட்டது. பாஜக ஆளும் குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் எதிர்கொண்ட நெருக்கடிகளே இதற்கு உதாரணமாக இருக்கின்றன.

ஆனால், குஜராத் நெருக்கடி வருவதற்கு முன்பே இந்தியாவில் தனது அத்தியாயம் முடியப் போகிறது என்பதை உணர்ந்த நித்யானந்தா தென் அமெரிக்கத் தீவுகளில் ஒன்றை தனது சில பக்தர்கள் மூலமாக பல லட்சம் டாலர் செலவில் வாங்கியிருக்கிறார்.

அதற்கு நித்யானந்தா சென்றடைந்த விதம்தான் த்ரில் பயணத்துக்கு ஒப்பானது. பெங்களூருவில் இருந்து சில மாதங்கள் முன்பே புறப்பட்டுவிட்டார் நித்யானந்தா. அவருடைய பாஸ்போர்ட் கோர்ட்டில் இருக்கும் நிலையில் திருட்டுத் தனமாக சாலை வழியாக அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் வழியாக பர்மாவை அடைந்திருக்கிறார். பர்மாவில் இருந்து சாலை வழியாகவே தாய்லாந்தை அடைந்துவிட்டார். இந்த தரை வழிப் பயணத்தை அடுத்து தாய்லாந்தில் இருந்து தென் அமெரிக்கத் தீவுகள் வழியே செல்லும் சரக்குக் கப்பலில் பதுங்கியபடி ஈகுவடார் பகுதித் தீவுகளை அடைந்துவிட்டார் நித்யானந்தா..

கைலாசா தீவு பற்றிய அறிவிப்பினை வெளியிடும் முன்னரே அங்கு சென்றுவிட்ட நித்யானந்தா, ட்ரினிடாட்- டெபாக்கோ தீவில்தான் பல நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். கைலாசா தீவை வாங்குகிற பரிவர்த்தனைகள் முடிவடைந்த பிறகுதான் தைரியமாக தான் ஒரு அரசாங்கம் என்பதை அறிவித்திருக்கிறார்.

வடகிழக்கு மாநிலம் பர்மா தாண்டி தாய்லாந்து வரை சாலைப் பயணம், அங்கிருந்து கப்பல் பயணம் என்று இப்போது தென் அமெரிக்கத் தீவில் இருக்கும் நித்யானந்தா மோடியோடும் மோதத் தயாராகிவிட்டார் என்பதைத்தான் அவர் ஐ.நா. சபைக்கு அனுப்பியிருக்கும் கடிதம் காட்டுகிறது. தனது நாட்டுக்கு அங்கீகாரம் கேட்டு ஐ.நா.வுக்கு நித்யானந்தா அனுப்பியிருக்கும் கடிதம். சர்ச்சைகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019