மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

நமக்கே மரியாதை கொடுக்க வச்சுட்டான்யா: அப்டேட் குமாரு

நமக்கே மரியாதை கொடுக்க வச்சுட்டான்யா: அப்டேட் குமாரு

காலைல வீட்ல இருந்து கெளம்பும் போதே அம்மா சொன்னாங்க, ‘வரும்போது காய்கறி எதாச்சும் வாங்கிட்டு வாடா, மழை வந்தா வெளிய போகவே முடியல’ன்னு, இத்தனை நாளா 90-ஸ் கிட்டுன்னு சொல்லி சொல்லியே ‘டாம் ஆண்ட் ஜெர்ரி’ பாக்குறத எல்லாம் கிண்டல் பண்ணிகிட்டு இருந்த என்னோட அருமை தாய், இன்னைக்குத் தான் பொறுப்பா ஒரு வேல குடுத்திருக்காங்க. இந்த டாஸ்க எப்படியும் சிறப்பா செஞ்சிரணும்னு டீக்கடைக்குக் கூட போகாம நானும் சீக்கிரமா கெளம்பிட்டேன். கத்தரிக்கா, முருங்கக்கா, வெண்டைக்கான்னு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு வாங்கிகிட்டு, கூட்டமே இல்லாத அந்தக் கடையில போய், ‘அண்ணே, ரெண்டு கிலோ வெங்காயம் குடுங்கண்ணே’னு சொன்னேன். அவ்வளவு தான் சுத்தி இருக்குறவன் பூரா, எதோ வேற்றுக்கிரகவாசியப் பாத்த மாதிரியே ஆச்சரியமா பாக்குறாய்ங்க. அந்த கடக்கார அண்ணா, ஒடனே சேர எடுத்துப் போட்டு, ‘உக்காருங்க தம்பி, டீ எதாச்சும் குடிக்கிறீங்களா’ன்னு ராஜ மரியாதை கொடுக்கிறாங்க. ஆனாலும் இந்த வெங்காயத்தால இப்படியும் சில நன்மைகள் இருக்கத்தான்யா செய்யுது. நீங்க அப்டேட்ட படிங்க, நான் அடுத்த வார சமையலுக்கு, வெங்காயத்த ஈஎம்ஐ வாங்க எதாச்சும் வழி இருக்காண்ணு பாத்திட்டு வர்றேன்.

கனகாம்பரி

வெயில் அடிக்கும் போது Dress தொவச்சா நம்ம மண்ட காயிது....

வெயில் போனவுடனே Dress தொவச்சா Dress உலர மாட்டிது...

பாட்டி வைத்தியம்

பெருங்காயம் ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை அகற்றக் கூடியது. இதனால், அதிகமாக அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள் இதனைக் சேர்த்துக் கொள்கின்றனர். வாயுத் தொல்லை ஏற்பட்டால், ஒரு சிட்டிகை பெருங்காயம் எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் போதும்.

ச ப் பா ணி

மரணம் சொல்லும் செய்தி எல்லாம்,'நன்றாக வாழ்ந்து விட்டு வா' என்பதுதான்.

ச ப் பா ணி

டெல்லி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி;

மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இலவசம்: அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

எதைக் குடுத்தா எலக்சன்ல ஜெயிக்கலாம்னு தெரிஞ்சிருக்கு

செந்திலின்_கிறுக்கல்கள்

அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்# ஆனி போயி ஆடி வந்தா டாப்பா வருவாரு மொமென்ட்!

ராஜ்மோகன்..!

நித்தியானந்தவுக்கு தனி நாடு கொடுத்த நல்லயிருக்கும்?

போர்'னு அறிவிச்சிட்டு ஒரு மணிநேரத்தில் எல்லா பைத்தியக்காரனையும் குண்டு போட்டு முடிச்சிடலாம்!

ஜோக்கர்

"பெண்கள் பேசுவதை" ஆண்கள் கேட்கவேண்டும் என்கிற ஆசையில் ஒன்றும் குறையில்லை,

ஆனால் ஆண்கள்

"அதனை கவனித்திருக்க வேண்டும்" எனும் எதிர்பார்ப்பில்தான் சிக்கல் உள்ளது...!!!

தமிழருவி

ஒருவரின் உண்மை முகம் தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே..

அவனது மனசாட்சி

அவனது கைபேசி ..!!

ரமேஷ்.ஏ

உடைந்த பலூனை விட,உடைத்த குழந்தையின் முகம் மிகவும் சிறிதாகிவிடுகிறது...!!!

எனக்கொரு டவுட்டு

நமக்குன்னு ஒரு பாக்கெட் நொறுக்கு தீனி கொடுத்தாலும், பக்கத்துல இருக்குற குழந்தைங்ககிட்ட சண்டை போட்டு வாங்கி சாப்பிடுற பழக்கம் இருக்கே..!

mohanram.ko

மருத்துவமனைகள் இல்லாத காலத்துல, வீட்டுக்கே வந்து பிரசவம் பார்த்ததுதான் முதல் 'டோர் டெலிவரி'

மயக்குநன்

'தடை பெறும்' எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!- மு.க.ஸ்டாலின்.

அப்ப... 'நடைபெறும்' எண்ணத்தில் அறிவிக்கலையா தலைவரே..?

முகவரி

இந்த உலகத்துலயே ஆகச்சிறந்த முட்டாள் யாருனு தெரியுமா..?

நாம தான் பெரிய புத்திசாலின்னு நினைக்கிறவன் தான்..

ச ப் பா ணி

job satisfaction என்பது சம்பளம்

வாங்கும்போது ஏற்படுவது

பாலசுப்ரமணி

ஐயா வணக்கம் !! குறைவாகவே இருக்கும் எங்கள் இனத்தை அவமானம் செய்யும் வகையில்

கவிதையோ/ காமெடியோ மீம்ஸோ / டிக்டாக்டோ செய்பவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அறிவிக்கிறோம்.

இப்படிக்கு

பெரிய வெங்காயம்

சிசி டூ : சின்ன வெங்காயம்

நட்சத்திரா

வாழ்க்கைங்கறது பாத்திரம் கழுவுற சிங்க் மாதிரி ...

கவலை , ஏமாற்றம், சோகம்னு சில அடைப்புகள் வரத்தான் செய்யும்...

அத தள்ளி விட்டீங்கனா ஈசியா ,சந்தோசமா வாழலாம்

-லாக் ஆஃப்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

புதன் 4 டிச 2019