மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

1300கிமீ: புலியின் நெடுந்தூர பயணம்!

1300கிமீ: புலியின் நெடுந்தூர பயணம்!

இந்தியாவில் இதுவரை பதிவாகாத நெடுந்தூர பயணத்தை புலி ஒன்று மேற்கொண்டுள்ளது. புலிகள் நடமாட்டம் பரவலைக் கவனிக்கும் ஆய்வுகள் தொடங்கப்பட்ட பின்னர் அதிகளவு நடைப்பயணம் மேற்கொண்ட புலி இதுவாகும்.

இரண்டரை வயதான இந்த ஆண் புலி, இரைக்காகவும், இருப்பிடத்துக்காவும், தன்னுடைய துணைக்காகவும் இப்படி சென்றிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரேடியோகாலர் பொருத்தப்பட்ட இந்த புலி, ஜூன் மாதம் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பண்ணைகள், நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் , அண்டை மாநிலத்திற்கு ஒரே நேர்கோட்டில் செல்லாமல் முன்னும் பின்னுமாக இந்த நடைப்பயணம் செய்தது ரேடியோகாலர் மூலம் கண்டறியப்பட்டது. இந்த பயணத்தின் போது இந்த புலியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருமுறை மட்டும் இந்த புலி இருந்த புதருக்குள் புகுந்த ஒரு குழுவினரில் ஒருவரை மட்டும் தாக்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள திபேஸ்வர் வனவிலங்கு பூங்காவிலுள்ள t1 என்று பெயரிடப்பட்ட பெண் புலிக்குப் பிறந்து c1 என்று பெயரிடப்பட்ட புலிதான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஜூன் மாத முடிவில் வனவிலங்கு சரணாலயத்தை விட்டுப் புறப்பட்ட இந்த புலி, முதலில் மகாராஷ்டிராவின் ஏழு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான தெலங்கானாவில் நெடும் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த வார இறுதியில் இந்த புலி மகாராஷ்டிராவில் உள்ள மற்றொரு வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உணவுக்காகக் காட்டுப் பன்றிகளையும், ஆடுகளையும் அடித்துச் சாப்பிட்டுள்ளது

இந்த புலியைக் கண்காணித்ததில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடத்திலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உடம்பில் உள்ள ரேடியோ காலரின் 80 சதவிகித மின் சக்தி தீர்ந்துவிட்டதாகவும், எனவே இந்த புலியைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாததால், விரைவில் அதனைப் பிடித்து வனவிலங்கு சரணாலயத்தில் விட இருப்பதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 4 டிச 2019