மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்: சிவன்

லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்: சிவன்

இஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேற்று, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2வின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியனுக்குக்கு நேற்று நன்றி தெரிவித்தது. “நாசாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்து விகரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக சண்முக சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்ட புகைப்படங்களை வைத்து சண்முக சுப்பிரமணியன் லேண்டரை கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதியே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் கிஷான்கர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. எங்களது இணையதளத்திலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் இஸ்ரோ இணையதளத்தில் சென்று தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019