மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

பிரியங்கா பாதுகாப்பு: அமித் ஷா விளக்கம்!

பிரியங்கா பாதுகாப்பு: அமித் ஷா விளக்கம்!

மத்திய அரசு அண்மையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொண்டது. இதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி பிரியங்கா காந்தியின் டெல்லி இல்லத்துக்குள் ராகுல் காந்தி காரைப் போன்றே இருக்கும் இன்னொரு காங்கிரஸ் நிர்வாகியின் கார் அனுமதிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது.

மத்திய டெல்லி லோதி தோட்டத்திலுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, டாடா சஃபாரி கார் ஒன்றை அனுமதித்தனர். அது ராகுல் காந்தி கார் என்று நினைத்ததாகவும், ஆனால் அது மீரட்டில் வசிக்கும் சந்திரசேகர் தியாகியின் கார் என்றும் பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதால்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பிரியங்காவின் கணவர் வதோராவும் இதுகுறித்து தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று( டிசம்பர் 3) மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரியங்காவின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடு எதேச்சையாக நடந்தது. இதற்கும் எஸ்பிஜி விலக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை. அந்தக் குடும்பத்துக்கு மட்டுமல்ல 130 கோடி இந்தியர்களுக்கும் மத்திய அரசுதான் பாதுகாப்பு வழங்குகிறது” என்று குறிப்பிட்டார். மேலும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனபோதும் பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் வேறு கார் புகுந்த மாதிரி வேறேதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று காங்கிரஸார் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019