மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன்

பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த வாரம் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் தனது இல்லத்தில் தங்கியிருந்த பேரறிவாளன், தனது சகோதரி மகள் செவ்வை திருமணத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 23) மாலை கிருஷ்ணகிரி சென்றார்.

தனது சகோதரி மகள் திருமணத்தில் கலந்துகொண்டு உற்றார் உறவினர்களைப் பார்த்து மகிழ்ந்த பேரறிவாளன் திருமண மேடையில் பறை இசைக் கருவியை இசைத்து மகிழ்ந்த காட்சி இப்போது சமூக தளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.

திருமண மண்டபத்திலும் பேரறிவாளனைச் சுற்றி போலீஸார் நிற்க, அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இயக்கத்தினர் பலபேர் வந்து பேரறிவாளனை சந்தித்து கை குலுக்கி அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது பேரறிவாளன் குடும்பத்தினர் பறை இசைக் கருவியை இசைத்தபடியே பேரறிவாளன் அருகே வந்தனர். மேடையில் நின்றிருந்த பேரறிவாளன் கலகலவென சிரித்தபடியே அந்த பறை இசைக் கருவியை வாங்கி தானும் இசைக்க, மண்டபம் முழுக்க ரசித்தது. அப்போது பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மையாரும் பறை இசைக் கருவியை வாங்கி இசைத்தார். பேரறிவாளன் வாழ்வில் இது ஒரு மறக்க முடியாத தருணமாக இருக்கும் என்கிறார்கள் அவரது உறவினர்கள்.

இந்தத் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணி , நடிகர் சத்யராஜ், இயக்குனர் கௌதமன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் புள்ளிகள் கலந்துகொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019