மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

அந்த அமைச்சரை யாரென்றே தெரியாது: பிரேமலதா

அந்த அமைச்சரை யாரென்றே தெரியாது: பிரேமலதா

விஜயகாந்தை அமைச்சர் பாஸ்கரன் விமர்சித்தது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் கட்சித் தொடங்கவுள்ள ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்கரனிடம், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆனாரோ அந்த நிலைதான் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு வரும் என்று விமர்சித்திருந்தார்.

அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக அங்கம் வகித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், நடிகர்களை பற்றி பொதுவாகத்தான் பேசினேன் என்றும் தவறாக எதுவும் கூறவில்லை எனவும் அமைச்சர் பாஸ்கரன் விளக்கம் அளித்தார்.

மதுரையில் இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அமைச்சர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் எந்த இலாகாவின் அமைச்சர் என்று நிச்சயமாக பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் கூறிய கருத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று கருத்து தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019