மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்!

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (நவம்பர் 24) தொடங்கி நடந்து வருகிறது. பொதுக்குழு தொடங்கியதும் மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். கூட்டத்தில் பிரதமர், மத்திய அரசு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், நீட்டுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், திமுகவை விமர்சித்தும் என மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வரவு-செலவு கணக்கை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், ‘அதிமுகவிற்கு 226.90 கோடி நிதி வங்கியில் வைப்பு நிதியாக உள்ளது. தேர்தல் நிதியாக 40.70 கோடியும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையின் மூலம் 1 கோடியும் வந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

பின்னர், அதிமுகவின் கட்சி விதிகளில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அதிமுக கட்சி ரீதியாக 56 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோரும் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திட வேண்டும் என்றும் கட்சி விதிகள் திருத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019