மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

வாயில்லா ஜீவனுக்கு ‘குரல்’கொடுத்த ஆண்ட்ரியா

வாயில்லா ஜீவனுக்கு ‘குரல்’கொடுத்த ஆண்ட்ரியா

பொதுவாகவே நடிகைகள் என்றாலே நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் என்று செல்லப் பிராணிகளோடு வலம் வருவார்கள். அந்த விலங்குகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் நடிகைகள் குரல் கொடுத்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நாய்க்காக சினிமாவில் பாடல் பாடி தன் குரலைக் கொடுத்திருக்கிறார் நடிகையும் சிறந்த பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியா.

அன்புள்ள கில்லி என்ற திரைப்படம் நாய்களைப் பற்றிய ஒரு படமாக நாய்களின் உலகத்தைப் புரிந்துகொள்ளும் வண்ணமாக உருவாகி வருகிறது. ‘உனக்கென வேண்டும் சொல்லு’ படத்தை இயக்கிய ஸ்ரீநாத் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் எட்டு நாய்கள் முக்கிய பாத்திரங்களாக வருகின்றன. முத்தாய்ப்பாக நாய்களுக்கு இடையிலான காதலும் இந்த படத்தில் இழையோடி வருகிறது. இதற்காகவே பாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையில் நாய்களின் காதல் உணர்வுகளைச் சொல்லும் பாடலை, யாரை வைத்து பாட வைக்கலாம் என்று யோசித்து யுவன்சங்கர் ராஜாவிடம் சென்றிருக்கிறார்கள். அவரும் மறுக்காமல் பாடிக் கொடுத்து புருவங்களை உயர வைத்தார். இது கொஞ்சம் பழைய செய்தி.

இதிலே புதிய செய்தி என்னவெனில் அதே பாடலில் பெண் நாயின் வெர்ஷனை இப்போது ஆண்ட்ரியா பாடிக்கொடுத்திருக்கிறார். ”இது விஷயமாக ஆண்ட்ரியாவிடம் பேசினோம். வியப்பு தெரிவித்த அவர் பாடலைப் பற்றி ஆழமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அற்புதமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார்” என்று நெகிழ்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019