மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம்: பாமகவை அழைத்த அமைச்சர்!

ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம்: பாமகவை அழைத்த அமைச்சர்!

ராமசாமி படையாச்சியார் மணி மண்டபத் திறப்பு விழாவில் பாமக சார்பில் ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், காமராஜர் ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் திறப்பு விழா கடலூரில் நாளை நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணி மண்டபத்தைத் திறந்துவைக்கிறார். இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.

விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் விசிக தலைவர் திருமாவளவன் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், பாமகவின் ராஜ்யசபா உறுப்பினரான அன்புமணி ராமதாஸின் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே சட்டமன்றத்தில் நடந்த ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக, மணி மண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு நேற்று (நவம்பர் 23) சென்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மணி மண்டபம் திறப்பு விழாவுக்கு வருகை தர வேண்டுமென பாமகவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாமகவினர், “பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. சென்னையில் இருப்பதால் பாமகவின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸும் பங்கேற்க மாட்டார். பாமகவின் சார்பில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவரான பு.தா.அருள்மொழி ஆகியோர் திறப்பு விழாவுக்குச் செல்ல உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019