மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கட்டுச்சோறு கெட்டுப்போகாமல் இருக்க...

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கட்டுச்சோறு கெட்டுப்போகாமல் இருக்க...

சபரிமலைக்குச் செல்லும் சீசன் தொடங்கிவிட்டது. சபரிமலைக்குச் செல்பவர்கள் வழியில் இருக்கும் சில வழிபாட்டுத்தலங்களிலும் தங்கிவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. அவர்களுக்கான ஒரே பிரச்சினை உணவு. ஹோட்டல் உணவு ஒன்றிரண்டு நாட்கள் என்றால் ஓகே. மேலும், சில நாட்கள் என்றால் வீட்டிலிருந்தே சில அயிட்டங்களை எடுத்துச் செல்வது உத்தமம். அப்படி எடுத்துச்செல்லும் அயிட்டங்கள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமலிருக்க சில யோசனைகள்.

சட்னிக்குப் பொட்டுக்கடலை வைத்து அரைப்பதற்குப் பதிலாக கடலைப்பருப்பை வறுத்து அரைத்துத் தேங்காயுடன் சட்னி அரைத்தால் விரைவில் கெட்டுப்போகாது அல்லது உளுத்தம்பருப்பை வறுத்து, தேங்காயுடன் சேர்த்துக் கெட்டியான துவையலாக அரைக்கலாம். துவையல் அரைக்கும்போது சிறிதளவு வெல்லமும் சேர்த்து அரைக்கவும். இது நீண்ட நேரம் கெடாமலிருக்க உதவும்.

மிளகாய்ப்பொடியுடன் எண்ணெய் சேர்த்து இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எடுத்துச் செல்லும்போது எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை உருக்கி மிளகாய்ப் பொடியில்விட்டு எடுத்துச் சென்றாலும் நீண்ட நேரம் கெடாது.

சர்க்கரை போடாமல்தான் ஃபிளாஸ்கில் காபி, டீயை ஊற்ற வேண்டும். சர்க்கரையைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு குடிக்கும்போது ஃபிளாஸ்கில் இருந்து குவளைகளில் ஊற்றும்போதுதான் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் காபி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

மாங்காய்த் தொக்கு, தக்காளி ஊறுகாய் எடுத்துச் செல்வதைவிட எலுமிச்சை ஊறுகாய் எடுத்துச் சென்றால் நீண்ட நாள்கள் கெடாது.

வற்றல் குழம்பு செய்தால் மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்கள் மட்டும் சேர்க்க வேண்டும்.

தோசை எடுத்துச் சென்றால் கனமாக வார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். மெலிதாக வார்த்து எடுத்துச் சென்றால் தோசை காய்ந்து தொண்டையைவிட்டு இறங்காது.

சப்பாத்தி எடுத்துச் சென்றால் ஓரங்களில் எண்ணெய்விடாமல் தணலில் மேல் வலையைப் போட்டுச் சுட்டு எடுத்துச் செல்லலாம்.

தயிர் சாதம் எடுத்துச் சென்றால் பாலை நிறைய ஊற்றி (ஒரு பங்கு பால் என்றால் கால் பங்குக்கும் குறைவாகத் தயிர் ஊற்றி) எடுத்துச் செல்ல வேண்டும். பால் தயிரில் உறைந்து நாம் சாப்பிடும்போது புளிக்காமல் சரியான பதத்தில் இருக்கும்.

புளி சாதம் செய்து எடுத்துச் சென்றால் புளிக்கரைசலுக்குப் பதில் புளிப்பேஸ்ட்டில் செய்து எடுத்துச் சென்றால் விரைவில் கெடாது.

இனிப்புக் குழிப்பணியாரம் எடுத்துச் செல்லும்போது வெல்லத்தைப் பாகு காய்ச்சி பிறகு மாவில் கலந்து, குழிப்பணியாரம் செய்யும்போது ஓரங்களில் லேசாக நெய் விட்டு (எண்ணெய்க்குப் பதில்) செய்யலாம். இது விரைவில் கெடாது.

நேற்றைய ரெசிப்பி: விரதக் கஞ்சி

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019